4 மையங்களில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்தேர்வுகள்

81பார்த்தது
4 மையங்களில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்தேர்வுகள்
4 மையங்களில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்தேர்வுகள்

ஈரோடு எஸ்எஸ்எல்சி, பிளஸ்1, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறா தவர்கள் மற்றும் தேர்வுக்கு வராதவர்களுக்கு துணைத்தேர்வு நடை பெற உள்ளது. அதன்படி பிளஸ் 2 துணைத் தேர்வு வரும் 24-ஆம் தேதி முதல் ஜூலை 1- ஆம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 1 துணைத் தேர்வு வரும் ஜூலை 2- ஆம் தேதி முதல் 9- ஆம் தேதி வரையும், எஸ் எஸ்எல்சி துணைத்தேர்வு வரும் ஜூலை 2- ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரையும் நடக்க உள்ளது.

இந்த தேர்வு ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி, சத்தி யமங்கலம் ஆகிய 4 மையங்களில் நடக்கிறது. துணைத்தேர்வு நடத் துவதற்கான பணிகளை பள்ளிக் கல்வித் துறையினர் செய்து வரு கின்றனர்.

தொடர்புடைய செய்தி