பவானி - Bhavanisagar

ஈரோடு மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

ஈரோடு மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட அணையில் இருந்து தொடர்ந்து நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வினாடிக்கு 1,798 கன அடியாக நீர்வரத்து வருகிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,800 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தடப்பள்ளி - அரக்கன் கோட்டை, காலிங்கராயன் பாசனங்களுக்கு தொடர்ந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.  இதைப்போல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு திறந்து விட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குண்டேரி பள்ளம், வரட்டுபள்ளம் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 41.75 அடியில் நீடிக்கிறது. இதேபோல் வரட்டுபள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியில் தொடர்ந்து நீடிக்கிறது. 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.54 அடியை நெருங்கியுள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా