தாளவாடி அருகே, 'சாணியடி திருவிழா

72பார்த்தது
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தீபாவளி முடிந்த மூன்றாவது நாளில் நடைபெறும் சாணியடி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. பல தலைமுறைகளாக நடந்து வரும் இந்தத்திருவிழாவிற்கு அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ‘சாணியடி திருவிழா’ வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவிழாவிற்கு முதல்நாளான்று கோயிலின் பின்பக்கம் ஊர்மக்கள் சாணத்தை குவித்து வைத்திருந்தனர். மறுநாள் காலை பீரேஸ்வரரை கோயிலுக்கு அருகேயுள்ள குளத்தில் நீராடச் செய்து, கழுதை மூலமாக கோயிலுக்கு அழைத்து வந்து பூஜைகள் செய்தனர். அதன்பிறகு கோயிலுக்கு பின்புறம் குவித்து வைத்திருந்த சாணத்தை உருண்டையாக்கி ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்து வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்வின் போது ஆண்கள் சட்டை அணிவதில்லை. சாணியடி நிகழ்வு நடந்தபிறகு, பக்தர்கள் கோயிலுக்கு அருகிலுள்ள குளத்தில் குளித்துவிட்டு, பீரேஸ்வரரை வணங்கினர்.
இந்த வழிபாட்டினால் ஊர்மக்கள், கால்நடைகள் நலம்பெறுவதுடன், விவசாயமும் செழிப்பாக இருக்குமென்கின்றனர். சாணியை உடலில் பூசுவதன் மூலம் உடலிலுள்ள நோய்கள் மற்றும் பீடைகள் ஒழியுமெனவும் கும்டாபுரம் கிராம மக்கள் நம்புகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி