கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 9 பெண்கள் உள்ளிட்ட 21 பேர் ஒரு வேனில் புறப்பட்டு, கர்நாடக மாநிலம் கொள்ளேகால் மாவட்டம், நொக்கனூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில், துக்கம் விசாரிக்கச் சென்றனர்.
இன்று மாலை புறப்படு, மீண்டும் கோபிசெட்டிபாளையம் திரும்பி வரும் போது, திம்பம் மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்த போது, 14-வது கொண்டை ஊசி வளைவு அருகே திரும்பும் போது, பிரேக் பிடிக்காததால், வேண் டிரைவர் சரவணக்குமார், தடுப்பு அரண் மீது மோதி வேனை நிறுத்த முயற்சி செய்துள்ளார்.
ஆனால், கட்டுப்பாட்ட இழந்த வேன் தடுப்ப அரணை உடைத்துக்கொண்டு, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. வேண் கவிழ்ந்து ஒரு முறை உருண்டதில், இடிபாடுகளுக்குள் சிக்கி, வேனில் பயணம் செய்த 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அனைவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காயம் அடைந்த 21 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நல்வாய்ப்பாக அனைவரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.