தாளவாடி தாலுகா அலுவலகமும் முன் குவிந்துள்ள விவசாயிகள்

58பார்த்தது
தாளவாடியில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

சத்தி, நவ. 06 - தாளவாடியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுப்பதற்காக தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

சத்தி அடுத்த தாளவாடி மலைப்பகுதி சுற்றிலும் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இந்நிலையில் நேற்று தாளவாடி பகுதி சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் தாளவாடி விவசாய சங்கத் தலைவர் குமார ரவிக்குமார் தலைமையில் பஸ் நிலையத்திலிருந்து தாளவாடி தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர். பின் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளிடம் சுப்பிரமணியம், சத்தி டிஎஸ்பி சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகள் அதிகாரிகளிடம் தாளவாடி, தலமலை, ஜீரஹள்ளி, ஆசனூர், கேர்மாளம் வனச்சரகத்திக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியே வருவதை தடுக்க வலியுறுத்தியும், வனத்துறையினரால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தாசில்தாரிடம் மனு அளித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி