நிரம்பியது நொச்சிக்குட்டை குளம்: விவசாய நிலங்களுக்குள்
புகுந்த உபரி நீர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே 150 க்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நொச்சிக்குட்டை என்ற குளம் அமைந்துள்ளது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக இந்த நொச்சிக்குட்டை குளம் 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது.
இந்நிலையில் நொச்சிக்குட்டை குளத்தில் இருந்து உபரி நீர் வெளியேறி அருகே உள்ள விவசாய நிலத்துக்குள் புகுந்ததால் குளத்திற்கு பின்புறமாக விவசாயி ஒருவர் இரண்டு ஏக்கரில் பரப்பளவில் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.
மேலும், அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த மரவள்ளி கிழங்கு அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அதே பகுதியில் குலை தள்ளிய நிலையில் அறுவடைக்கு தயாராக இருக்கும் சுமார் 500 வாழை மரங்கள் முழுவதும் சுமார் இரண்டு அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளதால் வாழை மரங்களும் சேதமடையும் நிலையில் உள்ளது.
இவ்வாறு பயிர்கள் சேதமடைந்தது குறித்து வேதனை தெரிவிக்கும் அப்பகுதி விவசாயிகள், அரசு கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.