புளியம்பட்டி வாரச்சந்தையில் ஆடு மாடுகள் ரூ. 1 கோடிக்கு ஏலம்

75பார்த்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள புஞ்சை புளியம்பட்டி வார சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விற்க வருகின்றனர்.

நேற்று(செப்.19) நடைபெற்ற சந்தைக்கு, 20 எருமைகள், 150 கலப்பின மாடுகள், 60 கன்றுகள் 100 ஜெர்சிரக மாடுகள் மற்றும் சிந்து, நாட்டு மாடு உள்ளிட்டவைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். எருமைகள் 15ஆயிரம் முதல் 25ஆயிரம் ரூபாய், கலப்பின மாடு 18ஆயிரம் முதல் 35ஆயிரம் ரூபாய், ஜெர்சி 20 ஆயிரம் முதல் 48 ஆயிரம் ரூபாய், சிந்து 12ஆயிரம் முதல் 41ஆயிரம் ரூபாய், நாட்டு மாடு 70 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி