கடம்பூரில் பொம்மை யானை அருகே நின்று போஸ் கொடுக்கும் யானை

72பார்த்தது
கடம்பூரில் பொம்மை யானை அருகே நின்று போஸ் கொடுக்கும் யானையின் வீடியோ வைரலாகி வருகிறது

சத்தி புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. யானைகள் அதிகம் உள்ள இந்த வனப்பகுதியில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதி சாலையை கடந்து செல்வது வழக்கம் யானைகள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வனத்துறை சார்பில் வாகன ஒட்டிகளிடம், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டம்மி யானை உருவ கட் அவுட் வைத்துள்ளனர். இந்த நிலையில் குன்றி செல்லும் வழியில் வைத்து டம்மி யானை அருகே யானை ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தது. இதை கண்ட வாகன ஓட்டிகள் டம்மி யானை அருகே நிஜயானை அதே போல் நின்று போஸ் கொடுத்ததை ரசித்து சென்றனர். சிலர் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் தங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தனர். இந்த வீடியோவை தற்போது வைராகி வருகிறது.

தொடர்புடைய செய்தி