பவானிசாகர் அருகே மாட்டை அடித்து கொன்ற புலி

5984பார்த்தது
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த தெங்குமரஹரடா பகுதியில் உள்ள வனப்பகுதியில் மேச்சலில் இருந்த மாட்டினை அப்பகுதிக்கு வந்த புலி ஒன்று அடித்துக் கொன்றது. இறந்து கிடந்த மாட்டின் அருகே அந்த புலியும் படுத்திருந்தது. சிறிது நேரத்தில் புலி புதருக்குள் சென்று மறைந்தது. இதை தெங்குமரஹரடா கிராமத்து பஸ்ஸில் சென்ற ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் குடிக்க வருவதும் பழக்கம். அதன்படி அந்த புலி பவானிசாகர் அணையை நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் குடிக்க வந்து வழி மாறி இப்பகுதிக்கு வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி