ஈரோடு மாவட்டம், சத்தி புதிய ஆற்றுப்பாலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மரநாய் பலி சத்தி புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, காட்டெருமை, சிறுத்தை, காட்டுபன்றிமுயல், கடமான் மற்றும் அரியவகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் ஏராளமான மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் நிறைந்து காணப்படுகிறது. இங்குள்ள வனவிலங்குகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் போது வழி மாறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சுற்றித்திரிவதால் வாகனங்களில் அடிபட்டு பலியாகி வருகின்றன. இந்த நிலையில் சத்தி புதிய ஆற்றுப்பாலத்தில் அரியவகை மரநாய் சுற்றித்திரிந்தது. பாலத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனார். மரநாய் உடலை கைப்பற்றிய வனத்துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.