ஈரோடு: புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

53பார்த்தது
ஈரோடு: புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படிப்படையில், பவானிசாகர், மொடக்குறிச்சி போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பவானிசாகர் போலீசார், முடுக்கந்துறை பகுதியில் சோதனை மேற்கொண்டதில், அங்குள்ள மளிகைக் கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருள்களான பான் மசாலா குட்கா உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து, போலீசார் கடை உரிமையாளரான அப்துல் ஜப்பார் (57) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 9,500 மதிப்பிலான 7 கிலோ புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோல், மொடக்குறிச்சி போலீசார் மேற்கொண்ட சோதனையில், புகையிலை பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட குளூர் பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி (55), கருந்தேவன் பாளையத்தைச் சேர்ந்த உமா சங்கர் (29) ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 500 மதிப்பிலான புகையிலை பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி