பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் 25-ந் தேதி கடைசி நாள்

1059பார்த்தது
பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் 25-ந் தேதி கடைசி நாள்
நாட்டுக்கு பெருமை தேடி தரும் வகையில் சமூகம், கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொறியியல், பொதுத்துறைகள், குடியியல் பணிகள், தொழில் துறையில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் பத்ம விருதுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2025-ம் ஆண்டுக்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திற னாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசு ஊழியர்கள், ரில் பணிபுரிபவ பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் விண்ணப் பிக்கலாம். டாக்டர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விருதுக்கு விண்ணப்பிக்க முடியாது. மேலும், விவரங்களை www. padmaawards. gov. in என்ற இணையதள முகவரியில் தெரிந்து செய்யப்ப கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை "மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு இட்ளை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஈரோடு மாவட்ட பிரிவு, வ. உ. சி. பூங்கா விளையாட்டரங்கம், ஈரோடு - 638003" என்ற முகவரிக்கு வருகிற 25-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.