ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

78பார்த்தது
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் சார்பில், அரசாணை 243 ஐ ரத்து செய்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று அம்மாபேட்டை வட்டார கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரத் தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். வட்டார டிடோஜாக் பொறுப்பாளர்கள் ரவிச்சந்திரன், முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் மதியழகன் மற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கல்வி மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரச் செயலாளர் உதயசூரியன் நன்றி கூறினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி