உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை கற்பூரம் வழங்குகிறது. கற்பூரம் எரிந்து அதன் வாசனை காற்றோடு கலக்கும்போது சுற்றி இருக்கும் விஷக்கிருமிகள் அழிக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் கலந்து. காலில் சேற்றுப்புண் தோன்றும் இடத்தில் தடவி வரலாம். எலுமிச்சை சாற்றில் சிறிது கற்பூரத்தை கலந்து தலையில் தேய்த்தால் தலைவலி கட்டுப்படும். தீக்காயத்தழும்பு, அம்மை தழும்புக்கு கற்பூரம் நிவாரணம் தரும்.