தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று (பிப். 24) மாநிலம் முழுவதும் கட்சியினரால் கொண்டாடப்படும் வேளையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விழா நடைபெறுகிறது. இதில் முன்னாள் அமைச்சரும், கட்சியின் சீனியருமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.