சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நடந்து முதிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, தோல்விக்கான காரணம் குறித்து நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுவரை 26 நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.