அமலாக்கத்துறை அதிகாரியை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

677பார்த்தது
அமலாக்கத்துறை அதிகாரியை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விவாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற புகாரில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனையும் நடத்தினர்.

தொடர்ந்து சிறையில் உள்ள அதிகாரி, ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார், மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து போலீஸ் காவலில் விசாரிக்க மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் 2 நாள் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி