அமலாக்கத்துறையா? பாஜகவின் அடியாள் துறையா?

557பார்த்தது
அமலாக்கத்துறையா? பாஜகவின் அடியாள் துறையா?
பாஜகவினரின் தூண்டுதலால் சாதிப்பெயரை சொல்லி சம்மன் அனுப்பியுள்ளது அநீதி என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும் பாஜகவினரின் அடியாள் துறையாக அமலாக்கத்துறை மாறியுள்ளது வெட்கக்கேடானது என கூறியுள்ளார். சாதி பெயரை குறிப்பிடுவது பாஜகவின் மனுநீதி முகத்தையே காட்டுகிறது என தெரிவித்த அவர் இதற்கு வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளார். சேலம் விவசாயிகளான கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோருக்கு அவர்களின் சாதிப்பெயரைச் சொல்லி அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி