ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான பட்னிடாப்பில் உள்ள அகார் வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை என்கவுன்டர் நடந்தது. தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு வந்தனர். பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் கூட்டுக் குழு பங்கேற்றது. பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து, பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்.