வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க எடப்பாடி உத்தரவு

67பார்த்தது
வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க எடப்பாடி உத்தரவு
தமிழ்நாட்டில் நேற்று (ஏப்ரல் 19) நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தொடர்ந்து, வருகிற ஜூன் 4ஆம் தேதியன்று முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கழக வேட்பாளர்களுக்கு உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில், இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி