நிதானமாக சாப்பிடும் போது தான் இந்த உணவு கசப்பாக உள்ளது அல்லது கெட்டுப்போனது போல் உள்ளது என்பதை உணர்ந்து அதை துப்புவதற்கு கூட நேரம் இருக்கும். அவசரப்பட்டு அரைகுறையாக மென்று சாப்பிட்டால் ஏதாவது ஃபுட் பாய்சன் கூட ஆகலாம். பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு என்று அவஸ்தைப்பட வேண்டி வரும். உணவை நிதானமாக மென்று சாப்பிட வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமாக இருந்து அது ஆயுளையும் அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.