இரவில் நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்

67பார்த்தது
இரவில் நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்
நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் காத்மாண்டுவில் இருந்து கிழக்கே 56 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் மேற்பரப்பில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்ச் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை எனத் தெரிகிறது. முழு விவரம் வெளியாகவில்லை.