குலசை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவின் முதல் நாளில் சிம்ம வாகனத்தில் துர்க்கை அம்மன் வீதி உலா நடைபெற்றது. நேற்று (அக்., 04) முதல் 11ஆம் தேதி வரை தினமும் காலை 8 மணி, 10.30 மணி, பகல் 12 மணி, 1.30 மணி, 2.30 மணி, மாலை 4.30 மணி, 6.30 மணி, இரவு 7.30 மணிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் 10ஆம் திருவிழாவான வருகிற 12ஆம் தேதி நடக்கிறது.