ரூ.3,135 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

58பார்த்தது
ரூ.3,135 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்
குஜராத் மாநிலம், போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடல் மார்க்கமாக கடத்தலில் ஈடுபட்ட 6 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடற்படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருடன் சேர்ந்து குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், படகு ஒன்றை இடைமறித்து சோதனை செய்தபோது போதைப்பொருள் சிக்கியுள்ளது. கடந்த 3 மாதங்களில் ரூ.3,135 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பிடிபட்டுள்ளன.