"போதைப் பொருள் - தடுத்து நிறுத்த வேண்டும்"

78பார்த்தது
"போதைப் பொருள் - தடுத்து நிறுத்த வேண்டும்"
போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சர்வதேச போதைப் ​பொருள் கடத்தல் கும்பல் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதும், மாநிலத்தில் போதைப் பொருள் பரவல் மிக மோசமான அளவிற்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என கூறியுள்ளார். மேலும் தங்களது வளாகத்தில், அருகிலோ போதைப் பொருள் பரவாமல் இருப்பதை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் போதைப் பொருள் போன்ற சலனங்களில் இருந்து இளைஞர்கள் விலகி நிற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் எதிர்கால தலைமுறையினரை அழித்து விடும் என அவர் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி