இளைஞர்கள் மத்தியில் போதை கலாச்சாரம் பெருகி வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக திரைப்படங்கள் உள்ளது. மது குடித்தல், கஞ்சா கடத்துதல், கஞ்சாவுக்கு அடிமை போன்ற காட்சிகள் பெருமளவில் இடம் பெறுகின்றன. பார்ட்டியில் கையில் மது பாட்டில்களை வைத்துக்கொண்டு ஆட்டம் போடுவது போல ஹீரோக்கள் நடிக்கின்றனர். இது இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்களே இப்படி சமூகத்தை சீரழிக்கும் செயல்களில் ஈடுபடுவது வேதனை தருகிறது.