போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கி டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் திங்கள்கிழமை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டில் இருக்கும் செல்போன் எண் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறை வழக்கிலும் கைதாகி உள்ளதால் ஜாஃபர் சாதிக் சிறையில்தான் இருப்பார்.