ஓட்டுநர் உரிமம்: மருத்துவச் சான்றிதழ் பெறுவது எப்படி.?

52பார்த்தது
ஓட்டுநர் உரிமம்: மருத்துவச் சான்றிதழ் பெறுவது எப்படி.?
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புதிய ஓட்டுநர் உரிமம் பெற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரை அணுகி, தங்கள் விண்ணப்ப பதிவெண்ணை கொடுத்து மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். பரிசோதனை அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் விண்ணப்பதாரரின் மருத்துவ சான்றிதழ்களை மருத்துவர் நேரடியாக ஆன்லைன் மூலம் சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மருத்துவரின் அங்கீகாரம் பெற்ற பிறகே 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் லைசன்ஸ் பெற முடியும்.