டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

76பார்த்தது
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா நாளை (செப்., 05) காலை 11 மணியளவில், சென்னை வண்டலூரில் உள்ள பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த விருது பெற 385 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிப்பார். அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி