'கொடுத்தால் இரட்டை இலை, இல்லை என்றால் வாழை இலை'

583பார்த்தது
'கொடுத்தால் இரட்டை இலை, இல்லை என்றால் வாழை இலை'
அதிமுக கூட்டணியில் இணைவது குறித்து இ.ஜ.பு கட்சித் தலைவர் மன்சூர் அலிகான் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர், அவர்களிடம்(அதிமுகவிடம்) போய் பேசி விட்டு வந்தேன். அது குறித்து இன்னும் ஏதும் தகவல் இல்லை. நான் இங்கே வேலூரில் வேட்பாளராக நிற்கிறேன். கொடுத்தால் இரட்டை இலை, இல்லை என்றால் வாழை இலை. வாழை இலை போட்டு உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதான். வாழை இலை உடம்புக்கு நல்லது, இரட்டை இலையும் உடம்புக்கு நல்லது; ஆனால் கறிவேப்பிலையாக மாறிவிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி