லிச்சி பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இந்த பழங்களில் கார்போஹைட்ரேட், புரதம், லிப்பிடுகள், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் சி போன்ற பல சத்துக்கள் உள்ளன. இவற்றை சாப்பிட்டால் அல்சைமர் நோயை குறைக்கலாம். மழைக்காலத்தில் பருவகால நோய்கள் வராமல் காக்கும். ஆய்வுகளின்படி, அவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகின்றன. லிச்சி பழங்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. அவை மார்பக புற்றுநோயையும் கட்டுப்படுத்துகிறது.