மது குடிப்பது உடல் நலத்தை பல்வேறு விதத்தில் பாதிப்படைய செய்கிறது. மது வயிற்றுக்குள் செல்லும் போது குடல் பாதிக்கப்பட்டு இரைப்பை சுழற்சி ஏற்படுகிறது. மது அருந்துபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் தொற்று நோய்கள் வந்தால் எளிதில் குணமாகாது. மது குடிப்பதினால் முக்கிய உறுப்பான கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு கல்லீரல் புற்று நோய்க்கு வழிவகுக்கும். இதயம், மூளை, நரம்பு மண்டலத்தை மதுவானது பாதிக்கிறது.