இப்போதெல்லாம் மக்கள் தங்கள் பிஸியான கால அட்டவணையால் பல வாழ்க்கை முறை தவறுகளை செய்கிறார்கள். குறிப்பாக உணவு உண்ட பிறகு செய்யக்கூடாத தவறுகள் உள்ளன. சிலர் சாப்பிட்டுவிட்டு உறங்குவார்கள். இப்படி செய்வதால் உணவு சரியாக ஜீரணமாகாது. இதனால் வாய்வு, வயிறு உப்புசம், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிக்கக் கூடாது. இவற்றில் உள்ள டானின் என்ற கலவை உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் குறுக்கிடுகிறது.