குளிக்கும்போது விரல்களில் ஏன் சுருக்கம் ஏற்படுகின்றன தெரியுமா?

64பார்த்தது
குளிக்கும்போது விரல்களில் ஏன் சுருக்கம் ஏற்படுகின்றன தெரியுமா?
குளிக்கும் போது கை மற்றும் கால் விரல்கள் மிகவும் சுருங்கிய நிலையில் காணப்படுவதற்கான விளக்கத்தை 2AI என்ற ஆய்வக விஞ்ஞானிகள் கொடுத்துள்ளனர். இதற்காக சிலரிடம் ஆய்வு நடத்திய போது, சாதாரண கைகளை வைத்து பளிங்கு கற்களை தூக்குவதை காட்டிலும், நீரில் ஊறவைக்கப்பட்ட கைகளால் பளிங்கு கற்களை எளிதாக எடுக்க முடிந்தது. தோலுக்கு கீழே இருக்கும் ரத்த நாளங்கள் சுருங்குவதால் இந்த சுருக்கம் ஏற்படுகிறது. “ஈரமான சூழலில் சிறந்த பிடியை நமக்கு வழங்குவதற்காக இயற்கையாக நடக்கும் செயல் இது” என்று விளக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி