விக்கல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?

68பார்த்தது
விக்கல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?
விக்கல் எடுத்தால், யாராவது நம்மை நினைக்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வோம். ஆனால் உண்மையில் விக்கல் எதனால் ஏற்படுகிறது தெரியுமா? இந்த செயல் உடலில் ஏற்படும் தன்னிச்சையான செயல். உதரவிதான தசைகள் (Respiratory Muscles) திடீர் சுருக்கங்களுக்கு உள்ளாகும்போது, அதைக் கட்டுப்படுத்த முடியாமல் விக்கல் வரும். சிலருக்கு சூடாக சூப், காபி, டீ குடிக்கும் போதோ, காரமான உணவுகளை சாப்பிடும் போதோ விக்கல் ஏற்படுகிறது. விக்கல்களை நிறுத்த சில நொடிகள் மூச்சைப் பிடித்துக் கொண்டால் போதும் அல்லது சிறிது தண்ணீர் குடித்தால் விக்கல் நின்று விடும்.

தொடர்புடைய செய்தி