மோடி 3.0 அமைச்சரவையில் 28 பேர் மீது கிரிமினல் வழக்குகள்

73பார்த்தது
மோடி 3.0 அமைச்சரவையில் 28 பேர் மீது கிரிமினல் வழக்குகள்
மோடியின் இந்த 3.0 அமைச்சரவையில் 31 வயது முதல் 80 வயது வரை உள்ளனர். இதில் 66% அதாவது 47 அமைச்சர்கள் 51 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள். 15% அமைச்சர்கள் அதாவது 11 அமைச்சர்கள் 12ம் வகுப்பு வரை மட்டுமே முடித்துள்ளனர். 80% பேர் அதாவது 57 பேர் பட்டதாரிகள். 3 அமைச்சர்கள் டிப்ளமோ படித்துள்ளனர். 71 அமைச்சர்களில் 39% பேர் மீது அதாவது 28 பேர் மீது கிரினிமல் வழக்குகள் உள்ளன. இதில் 19 அமைச்சர்கள் மீது அதாவது 27% அமைச்சர்கள் மீது கொலை முயற்சி மற்றும் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன. 71 அமைச்சர்களில் 99% , அதாவது 70 அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள்.

தொடர்புடைய செய்தி