மகளிர் மேன்மை மதிப்பு திட்டத்தில் பெண்கள், சிறுமிகள் என அனைத்து மகளிரும் பயன் பெறலாம். இதில் சேர குறைந்தபட்ச தொகை ரூ.1,000 மற்றும் அதிகபட்சம் ரூ.2 லட்சம் ஆகும். செலுத்தப்பட்ட முதலீட்டுக்கு காலாண்டுக்கு ஒருமுறை கூட்டுவட்டி 7.5 சதவீதம் கணக்கில் சேர்க்கப்படும். இதன் முதிர்வு காலம் 2 ஆண்டுகள். கணக்கு தொடங்கி 6 மாதங்கள் கழித்து முன்முதிர்வு செய்தால் குறைக்கப்பட்ட வட்டி விகிதம் 5.5 சதவீதம் முதலீட்டு தொகையுடன் கிடைக்கும்.