வாட்ஸ் ஆப் அட்மின் முகத்தை உடைத்த திமுக பிரமுகர்

79பார்த்தது
வாட்ஸ் ஆப் அட்மின் முகத்தை உடைத்த திமுக பிரமுகர்
திருவொற்றியூர் ஜோதி நகர் பகுதியில் வசித்து வருபவர் இளைய குமார். இவர் சொந்தமாக தண்ணீர் கேன் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். மேலும் இவர் ஜோதிநகர் குழு என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு ஒன்றை வைத்துள்ளார். இதில் மிக்ஜாம் புயல் நிவாரணம் குறித்து இவருக்கும் அதே வாட்ஸ் ஆப் குழுவில் இருக்கும் திமுக பிரமுகரான தினேஷ் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தினேஷை குழுவில் இருந்து இளையகுமார் நீக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் இளையகுமாரின் கடைக்கு சென்று அவரின் முகத்தில் பாக்சிங் செய்யவது போல பல முறை குத்தியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி