'திமுக ஊழலில் ஊறிப்போய் எல்லா பணத்தையும் சுருட்ட பார்க்கிறது'

567பார்த்தது
திமுக ஊழலில் ஊறிப்போய் எல்லா பணத்தையும் சுருட்ட பார்க்கிறது என பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். விருதுநகரில் பாஜகவின் நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தை இன்று திறந்து வைத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஊழலில் ஊறிப்போய் எல்லா பணத்தையும் சுருட்ட திமுக பார்க்கிறது. ஒரு மாத காலத்திற்குள், விவசாய பிரதிநிதிகள், வர்த்தக பிரமுகர்கள் வர்த்தக சங்கங்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை பெற்று அதை நிறைவேற்றும் விதமாக தேர்தல் அறிக்கை தயார் செய்ய தொடர் கூட்டங்கள் நடத்தி வருகிறோம்' என்றார்.

தொடர்புடைய செய்தி