மதுரை பழங்காநத்தம் தெற்கு தெருவில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மக்களை ஏமாற்றவே திமுக மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்க்கு எதிராக போராட்டம் நடத்துகிறது. திமுக மக்களுக்காக செயல்படும் அரசியல் கட்சி கிடையாது, திமுக பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக செயல்படுகிறது” என விமர்சித்துள்ளார்.