மதிமுக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுக்கு திமுக அழைப்பு

83பார்த்தது
மதிமுக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுக்கு திமுக அழைப்பு
திமுக கூட்டணி கட்சிகளுடனான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதற்காக மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. ஐயூஎம்எல் உடனான பேச்சுவார்த்தை மாலை 4:30 மணிக்கும், மதிமுக உடனான பேச்சுவார்த்தை மாலை 5.30 மணிக்கும் நடைபெறுகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஐயூஎம்எல் கட்சி, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியை கேட்ட நிலையில், இன்று நடைபெறும் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும், அதே தொகுதியை கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி