வேளாண் நிதி நிலை அறிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டுள்ளார். உழவர் பெருமக்களது வாழ்வுக்கு மேன்மைக்குமான அனைத்து திட்டங்களையும் தீட்டி இருக்கிறோம். திமுக அரசு, உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதி நிலை அறிக்கை உணர்த்துகிறது. மாநிலத்து மக்களை மட்டுமல்ல, மண்ணுயிர் அனைத்தையும் மேம்படுத்தும் ஆட்சி நடைபெற்று வருகிறது என வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்பு பேசியுள்ளார்.