திமுக - பாஜகவினர் சண்டையை நிறுத்திய தேசிய கீதம்

79பார்த்தது
திமுக - பாஜகவினர் சண்டையை நிறுத்திய தேசிய கீதம்
அயோத்தியில் கடந்த 30 ஆம் தேதி பிரதமர் மோடி 2 அம்ரித் எக்ஸ்பிரஸ் ரெயில்களை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இதில் ஒரு ரயில் மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களை இணைக்கிறது. 32 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயில் ஜனவரி1 ஆம் தேதி மாலை ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது இதனை வரவேற்க பாஜகவினரும், திமுகவினரும் கலந்து கொண்டிருந்தனர். திடீரென இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. செய்வதறியாது திகைத்த காவல்துறையினரால் தேசிய கீத பாடல் ஒலிக்கப்பட்டதையடுத்து அனைவரும் அமைதியாயினர்.

தொடர்புடைய செய்தி