திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பீஹார், உ.பி., உத்தரகண்ட், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்திய கம்யூ., கட்சி சார்ந்த ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில், புலம்பெயர்ந்த தொழிலாளர் பாதுகாப்பு கருத்தரங்கம், திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி., அலுவலக அரங்கில் நேற்று நடந்தது. தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு இந்தி மட்டுமே தெரியும் என்பதால், கருத்தரங்கம் முழுதும் இந்தியிலேயே நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.