கோவாவிற்கு பதில் ராமர் கோயிலுக்கு அழைத்து சென்றதால் விவாகரத்து

54344பார்த்தது
கோவாவிற்கு பதில் ராமர் கோயிலுக்கு அழைத்து சென்றதால் விவாகரத்து
கோவாவிற்கு ஹனிமூன் அழைத்து செல்லாமல் தனது கணவர் தன்னை அயோத்திக்கு அழைத்து சென்றார் என கூறி பெண் ஒருவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐடி துறையில் பணியாற்றும் தனது கணவர் அவரது பெற்றோரை தனியாக விட்டுவிட்டு ஹனிமூன்க்கு வெளிநாடு செல்ல முடியாது எனவும் வேண்டுமானால் கோவா உள்ளிட்ட உள்நாட்டு சுற்றுலாத்தலங்களுக்கு செல்லலாம் என கூறியதாக விவாகரத்து மனுவில் அந்த பெண் கூறியுள்ளார். மேலும் கூறியபடி கோவாவிற்கு அழைத்து செல்லாமல் அவரது பெற்றோரை எங்கள் பயணத்தில் இணைத்துக்கொண்டு அயோத்தி ராமர் கோவிலுக்கு அழைத்து சென்றார் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி