பெங்களூருவை சேர்ந்த அசோகா டிரஸ்ட் பார் ரிசர்ச் ஆராய்ச்சியாளர்கள் உண்ணக்கூடிய வகையிலான 3 பூச்சி இனங்களை கண்டறிந்துள்ளனர். வடகிழக்கு இந்தியாவின் உள்ள பழங்குடியின மக்களால் பாரம்பரியமாக இந்த பூச்சி இனங்கள் உண்ணப்பட்டு வருகிறது. உலக அளவில் 2,000-க்கும் மேற்பட்ட பூச்சி இனங்கள் உண்ணக்கூடியவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள 3 புதிய இனங்களுக்கு கொரியஸ் அடி, எஸ்குலெண்டு, இன்ஸ்பெரடேஸ் என பெயரிடப்பட்டுள்ளது.