தக்காளி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

54488பார்த்தது
தக்காளி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
மாலிக் மற்றும் சிட்ரிக் என்ற இரண்டு அமிலங்கள் தக்காளியில் உள்ளது. இத்தகைய அமிலங்கள் நிறைந்த தக்காளியை நாம் அதிகமாக சாப்பிடுவதனால் வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்த செய்யும். உடலில் அலர்ஜி உள்ளவர்கள் மற்றும் தக்காளி சாப்பிடுவதனால் அலர்ஜி வரும் என்ற நபர்கள் தக்காளி சாப்பிட கூடாது. நாம் தொடர்ச்சியாக அளவுக்கு அதிகமாக தக்காளி சாப்பிடுவதன் மூலம் நம்முடைய உடலில் ஆக்சலேட் மற்றும் கால்சியம் இரண்டும் உருவாகி அதன் பிறகு சிறுநீரகத்தில் கல் வரும் வாய்ப்பினை ஏற்படுத்தி விடும். தக்காளி அதிகமாக சாப்பிடும் போது கால்சியம் நமது உடலில் அதிகரிக்கும் அதனால் உடலில் மூட்டு வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்தி