டீயுடன் பிஸ்கட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

67பார்த்தது
டீயுடன் பிஸ்கட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
சிறுவர், பெரியவர் என வயது வித்தியாசம் இன்றி டீயுடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. அப்படி சாப்பிடுவதால் சில பாதிப்புகள் வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பிஸ்கட்டில் அதிக கலோரிகள் இருப்பதால் டீயுடன் சேர்த்து தொடர்ச்சியாக நீங்கள் பிஸ்கட் சாப்பிட்டால் உங்கள் எடை அதிகமாக கூடும். டீயுடன் சேர்த்து சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வழிவகுக்கும். அதிகள் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பக்கவாதம், இருதய அடைப்பு ஆகியவை ஏற்படும் அபாயம் அதிகரிக்க கூடுமாம். பிஸ்கட்டை தினமும் சாப்பிடுவதால் பல்சிதைவு கூட ஏற்படலாம். பிஸ்கட்டுடன் தொடர்ந்து டீ சாப்பிடுவது பசியின்மைக்கு வழிவகுக்க கூடுமாம்.

தொடர்புடைய செய்தி