‘இந்தியா’ கூட்டணியின் துணை சபாநாயகர் வேட்பாளராக அவதேஷ் பிரசாத்?

62பார்த்தது
‘இந்தியா’ கூட்டணியின் துணை சபாநாயகர் வேட்பாளராக அவதேஷ் பிரசாத்?
‘இந்தியா’ கூட்டணியின் சார்பில் துணை சபாநாயகர் வேட்பாளராக அவதேஷ் பிரசாத்தை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் துணை சபாநாயகர் வேட்பாளராக சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த பைசாபாத் தொகுதி எம்பி அவதேஷ் பிரசாத்தை முன்னிறுத்துவது குறித்து திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆய்வு செய்து வருகின்றன. அதேநேரம் கேரளாவில் இருந்து எட்டு முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்ட கே.சுரேஷை, துணை சபாநாயகராக களமிறக்க காங்கிரஸ் கட்சி ஆர்வமாக உள்ளதாக செய்திகள் வருகிறது.

தொடர்புடைய செய்தி