திருச்சிக்கு அழைத்துச் செல்லப்படும் இயக்குனர் மோகன் ஜி

66பார்த்தது
திருச்சிக்கு அழைத்துச் செல்லப்படும் இயக்குனர் மோகன் ஜி
பழனி பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுவதாக இயக்குனர் மோகன் ஜி குற்றஞ்சாட்டினார். இதைத்தொடர்ந்து அவர் மீது பழனி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இன்று (செப்.24) காலை சென்னை ராயபுரத்தில் உள்ள இல்லத்தில் வைத்து போலீசார் மோகன் ஜியை கைது செய்தனர். அவர் மேல் விசாரணைக்காக திருச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவார் என காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி